'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜகபதி பாபு, லால் நடித்த புலிமுருகன் படம் கடந்த 7ந் தேதி மலையாளத்தில் வெளிவந்து வரலாறு காணாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வசூல் சாதனையாக இருந்த த்ரிஷ்யம் படத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கசின்ஸ், விஷூதன், மல்லு சிங், சவுண்ட் தோமா படங்களை இயக்கிய வைஷாக் இயக்கி உள்ளார். வினு மோகன், சுராஜ், நமீதா, கிஷோர், நந்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புலிவேட்டையை அடிப்படையாக கொண்ட கதை.
சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் ரீமேக் உரிமத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை தமிழில் பிரமாண்டமாக ரீமேக் செய்ய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை ஏற்பாடு செய்து வருகிறார். மோகன்லால் படங்களின் ரீமேக்கிற்கு கமல்ஹாசன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அணுகவும் முடிவு செய்திருக்கிறார்கள். இது தவிர தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.