‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இளவட்ட நடிகர்களுக்கு அம்மாவாக தொடர்ந்து நடித்து வரும் சரண்யா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில்தான் இணைந்தார். அந்த படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா எப்போதும் போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் தனுசும் இயல்பாக நடித்திருந்தார். அந்த வகையில், அந்த படத்தில் அவர்கள் நடித்த காட்சிகள் உருக்கமாக வெளிப்பட்டிருந்தது.
விளைவு, இப்போது தான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தில் மீண்டும் சரண்யாவையே தனக்கு அம்மாவாக்கி விட்டார் தனுஷ். எப்படி வேலை யில்லா பட்டதாரி படத்தில் வேலை வெட்டியில்லாமல் திரிந்த தனுசுக்காக, கணவனிடம் பரிந்து பேசி நடித்தாரோ அதேபோல் இந்த படத்தில் எந்நேரமும் அரசியல்வாதிகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மகனை நினைத்து கடுமையாக பீல் பண்ணும் ரோலில் நடித்துள்ளாராம் சரண்யா. அந்த வகையில், சரண்யா-தனுசுக்கிடையிலான பாசப்போராட்ட காட்சிகள் இந்த படத்திலும் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறதாம்.