ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகனம் படத்தில் அறிமுகமானவர் ஜெய் குஹெய்னி. அதன்பிறகு மெய்யழகி, மையம், சார்லஸ் ஷபி கார்த்திகா போன்ற படங்களிலும் நடித்தார். அந்த படங்களில் அழுத்தமான வேடங்களில் சிறப்பாக நடித்த போதும் படங்கள் வெற்றி பெறாததால் பின்னர் அவருக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. அதோடு, கிளாமருக்கான உடல்கட்டு இருந்தும் அவர் கிளாமராக நடிக்க மறுத்து வந்தார்.
இதனால் அவரைத்தேடி அடுத்தபடியாக புதிய படங்கள் எதுவும் செல்லவில்லை. இந்நிலையில், பல மாதங்களாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த ஜெய் குஹெய்னி, இப்போது படிப்பை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து வருகிறார். அதோடு, விரைவில் வெளிநாடு சென்று மேற்படிப்பை தொடரவும் திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார் ஜெய்குஹெய்னி.