விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் படம் மீண்டும் வா அருகில் வா. ஜெ.ஜெய ராஜேந்திர சோழன் இயக்குகிறார். கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், விவேக், ஜேஷ்வந்த் இசை அமைக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப்பும், புதுமுகம் ஆரவ்வும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். சாரா தேவா என்ற புதுமுகம் ஹீரோயின்.
படம் பற்றிய இயக்குனர் ஜெய ராஜேந்திர சோழன் கூறியதாவது: இது ஒரு மனநல மருத்துவரைச் சுற்றி நடக்கும் திகில் படம். ஒரு மன நல மருத்துவர் தனது இயல்பியல் திறமைகளை கொண்டு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை பெற முயற்சிக்கிறார். திடீர் திடீரென இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். இந்த இரண்டுக்குமான தொடர்பை திகிலுடன் சொல்லும் படம். இது ஒரு வித்தியாசமான திரைக்கதை முயற்சி. படத்தின் சஸ்பென்சை கிளைமாக்சுக்கு முன்பே சொல்லிவிடுவோம். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ் வரும். கிளைமாக்ஸ் முடியும்போது அது வேறு விதமமாக இருக்கும். என்கிறார் ஜெய ராஜேந்திர சோழன்.