ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லட்சுமண் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் 'போகன்' படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாக உள்ளது. 'ரோமியோ ஜுலியட்' படத்திற்குப் பிறகு லட்சுமண், இமான், ஜெயம் ரவி, ஹன்சிகா மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். 'ரோமியோ ஜுலியட்' படம் சுமாரான வெற்றியைப் பெற்றதால் மீண்டும் அந்தப் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்தார். இந்தப் படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி, ஜெயம் ரவி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'தேவி' படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்களது முதல் தயாரிப்பே வெற்றிகரமாக ஓடியதால் அடுத்தடுத்த படங்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நினைப்பில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம். டிசம்பர் மாதம் 16ம் தேதி 'எஸ் 3' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து ஒரு வாரம் கழித்து 'போகன்' படத்தை வெளியிடுகிறார்கள். அனேகமாக இப்படத்திற்குப் பெரிய போட்டி எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஹன்சிகா கைவசம் உள்ள ஒரே படம் 'போகன்' மட்டுமே. இந்தப் படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் தொடரும். இல்லையென்றால் அவர் மீண்டும் தெலுங்குப் பக்கம் போக வேண்டியதுதான். அதனால், தன்னுடைய அடுத்த இன்னிங்ஸுக்காக இப்போதே தூது விட ஆரம்பித்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'போகன்' படத்தின் டீசரை விரைவில் வெளியிட உள்ளார்கள்.