Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித், விஜய் படங்களில் நடிக்க வேண்டும்!- காளி வெங்கட்

18 அக், 2016 - 09:14 IST
எழுத்தின் அளவு:
i-want-to-act-with-ajithy-sir-and-vijai-sir-say-actor-kaali-venkat

முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று படங்களில் நடித்த பிறகு கவனிக்கப்படும் நடி கரானார் காளி வெங்கட். அதோடு வெறும் காமெடியனாக மட்டுமே இல்லாமல், குணசித்ரம் கலந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் அவர் கைவசம் உள்ளது.


இந்த படங்கள் பற்றி காளி வெங்கட் கூறுகையில்,


இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு என்னைத்தேடி நல்ல வெயிட்டான வேடங்களாக வருகிறது. அதனால் மகிழ்ச்சியாக நடித்து வருகிறேன். அதில் கொடி படத்தில் தனுஷின் நண்பனாக நடித்துள்ளேன். காமெடி வேடம்தான் என்றாலும், ஹீரோ பேசும் வசனங்களுக்கு கமெண்ட் கொடுப்பது போன்ற வழக்கமான காமெடியனாக இல்லாமல் மாறுபட்ட நண்பனாக நடிக்கிறேன். முக்கியமாக தனுஷ் எனது சின்ன வயசு நண்பன் என்பதால் அவருக்காக எதையும் செய்யும் வேடத்தில் நடிக்கிறேன். அதனால் எப்படி முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று படங்கள் எனது கேரியரில் திருப்புமுனையாக அமைந்ததோ அதேபோன்று கொடி படமும் திருப்புமுனையை ஏற்படுத்தும். மேலும், ராஜா மந்திரி படத்திற்கு பிறகு மீண்டும் கலையரசனுடன் இணைந்து சி.வி.குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். ஜெய்யுடன் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறேன். தவிர, நாகேஷ் திரையரங்கம், காத்தாடி என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.


இப்படி சொல்லும் காளி வெங்கட்டிற்கு அஜித், விஜய் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளதாம். விஜய்யின் தெறி படத்தில் நடித்தபோதும், படம் முழுக்க அவருடன் வருவது போன்ற வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தல அஜித்துடன் இதுவரை நடிக்கவில்லை. அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்கிறார் காளி வெங்கட்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in