தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கொடி. அதோடு முதன்முறையாக திரிஷாவுடனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். மேலும் சமீபகாலமாக சினிமா விழாக்களில் வேஷ்டி கெட்டப்பில் வந்து செல்லும் தனுஷ், இந்த படத்தில் கொடி என்ற கேரக்டரில் படம் முழுக்க கரை வேஷ்டி, கதர் சட்டை அணிந்தே நடித்துள்ளார். முழுநேர அரசியலில் இறங்கி எதிர்காலத்தில் பெரிய தலைவராக வர வேண்டும் என்று போராடும் ஒரு இளைஞனாக நடித்துள்ளார்.
மேலும், இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய கதை என்றாலும், இந்த படத்தில் எந்த தலைவர்களையும மறைமுகமாக தாக்குவது போன்றோ, அரசியல்வாதிகளை அட்டாக் பண்ணும் பஞ்ச் டயலாக்குகளோ இல்லையாம். ஆனால், இந்த கொடி படத்தில் இளைஞர்களுக்கு ஒரு அரசியல் பற்றிய கருத்தினை பதிவு செய்கிறாராம் தனுஷ். அது அட்வைசாக இல்லாமல் நல்லதொரு பாடமாக இருக்கும் என்கிறார்கள்.