Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதி சார்ந்த படங்கள்தான் ஹிட்டாகிறது: இயக்குனர் ராம் வருத்தம்

17 அக், 2016 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Director-Ram-expresses-his-felling-about-caste-based-films

கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள டாக்டர் ஷ¨மேக்கர், பீபேர் ஆஃப் கேஸ்ட் என்ற ஆவண படங்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் ராம் பேசியதாவது:

தமிழில் இதை போன்ற ஆவண படங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். இதில் டாக்டர் ஷூ மேக்கர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஷூ மேக்கர் ஆவண படத்தை நான் உலக தரத்தில் உருவாகி உள்ள மிக சிறந்த ஆவண படங்களில் ஒன்று என்று கூறுவேன். இதை போன்ற கருத்துள்ள குறும்படங்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் எடுப்பது மிகவும் கடினம் , ஆனால் ஆவண படம் என்று வரும் போது அதில் நாம் இதை போன்ற புரட்சிகரமான கருத்துகளை பேசலாம். இந்தியாவின் முக்கியமான ஆவண பட இயக்குநர்களுக்கு சவாலாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெய் குமார் , அதை எப்போதும் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் புரட்சி செய்து வரும் இயக்குநர் பா.ராஞ்சித் தயாரித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.


தமிழகத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் இதை போன்ற ஆவண படங்களை திரையரங்கில் திரையிடுவது கடினமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் எம்மாதிரயான படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் தரலோக்கல் ஹிட் ஆகிறது என்பதும் , அவை எந்த ஜாதியை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் என்றும் நமக்கு தெரியும். என்றார் இயக்குநர் ராம். விழாவில் இயக்குனர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன், எடிட்டர் லெனின், எழுத்தாளர் எஸ்.வி.ஆர், நடிகர் ஜான் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in