‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இசை அமைப்பாளர் அனிருத்தின் தம்பி ஹரிகிசேஷ் நடிக்கும் படம் ரம். அனிருத் இசை அமைத்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் நடித்துள்ளனர். சாய் பரத் இயக்கி உள்ளார்.
இது ஒரு திகில் படம். காட்டுக்குள்ளும், மர்ம பங்களாவுக்குள்ளும் நடக்கிற கதை. ஏற்னெவே வெளியாகியுள்ள "ஹலோ அமிகோ..." மற்றும் "பேயோபோபியா..." பாடல்கள் ஹிட்டாகி உள்ளது. இந்த நிலையில் படதை ஸ்ரீ சாய் சர்க்கயூட் 6000 என்ற நிறுவனம் சார்பில் ஏ.பி.ஸ்ரீகாந்த் வாங்கி உள்ளார். படத்தை நல்ல லாபத்திற்கு விற்றிருப்பதாக தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா கூறியுள்ளார். "அனிருத்தின் இசை, திகைக்க வைக்கும் திகில் இந்த இரண்டும் படத்தின் வெற்றிக்கான விஷயங்கள் அதற்காகவே படத்தை வாங்கி உள்ளோம். நவம்பர் முதல் வாரத்தில் பாடல்களையும், கடைசி வாரத்தில் படத்தையும்" வெளியிடுகிறோம். என்கிறார் ஏ.பி.ஸ்ரீகாந்த்.