திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் குத்து ரம்யா நாயகியாக நடித்து நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ள படம் சிவநாகம். தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த கன்னட படம் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் எதிர்ப்புகள் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், தமிழ்நாட்டில் சுமார் 350 தியேட்டர்களில் சிவநாகம் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லட்சுமிராமகிருஷ்ணனின் அம்மணி படம் வெளியாகியுள்ள நிலையில், அப்புக்குட்டியின் காகித கப்பல் படமும் திரைக்கு வர இருந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியான ரெமோ, றெக்க, தேவி போன்ற படங்கள் ஏற்கனவே தியேட்டர்களை பிடித்து வைத்திருப்பதால், சில படங்களுக்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் காகித கப்பல் படத்திற்கு வெறும் 30 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்ததாம். அதனால் அப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விட்டனர்.