'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட வெளிநாட்டிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த தமிழ் படமும் பெற்றிராத வெற்றியை ரெமோ பெற்றிருக்கிறது. இதற்காக அங்குள்ள தமிழ் அமைப்புகள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ளுமாறு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று தற்போது சிவகார்த்திகேயன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். நயன்தாரா முதன் முறையாக சிவகார்த்திகேயனோடு நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் 11ந் தேதி தொடங்குகிறது.