பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
கங்கனா ரணாவத், எப்போதும் வித்தியாசமான வேடங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற நடிகையான இவர், ரங்கூன், சிம்ரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சிம்ரன் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கங்கனா, விவாகரத்து பெற்ற பெண்ணாக நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‛பி கிரேடு' படங்களில் நான் தான் முதன்மையான ஹீரோயின்களாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி கங்கனா விரிவாக கூறியிருப்பதாவது... ‛‛இந்த மாதிரி படம் தான் பண்ண வேண்டும் என்று எனக்கென்று நான் நிரந்தரமாக ஒன்றை வைத்து கொண்டது கிடையாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செய்வேன். பி கிரேடு பட ஹீரோயின்களில் நான் முதன்மையானவளாக இருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து தோல்வி படங்கள் தந்தாலும், சிறந்த நடிகையாக திகழ்வீர்கள், நான் அந்தமாதிரி ரகம் என்று'' கூறியுள்ளார்.