இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மெரினா படத்தில் நாயகனான சிவகார்த்திகேயன், ரெமோவோடு சேர்த்து பத்து படங்களில் நடித்து விட்டார். இதில் ரெமோ படத்தில் லேடி கெட்டப்பில் நடித்து தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து மோகன்ராஜா, பொன்ராம் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். அதோடு, நயன்தாரா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடனும் ஜோடி சேருகிறார்.
மேலும், குறுகிய காலத்தில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்ட சிவகார்த்திகேயன், என்னை நடிகனாக்கியவர் நடிகர் விக்ரம் என்கிறார். அதுபற்றி அவர் கூறுகையில், நான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது, பலமுறை விக்ரம் சாரை சந்தித்திருக்கிறேன். அப்போது நான் பேசும் காமெடியை வைத்து, நீ சினிமாவில் நடிக்க வந்தால் பெரிய நடிகராகி விடலாம் என்று சொல்வார். அவர் பலமுறை அப்படி சொன்ன பிறகுதான் எனக்குள் நடிப்பு ஆசை வந்தது. அதனால்தான் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர முயற்சி எடுத்தேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.