'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சரித்திர வெற்றி கண்ட பாகுபலி திரைப்படத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரம். இக்கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி, ஆனால் ஸ்ரீதேவி சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டியதால் அவரை நீக்கி விட்டு ரம்யா கிருஷ்ணனை படக்குழு ஒப்பந்தம் செய்தது. படமும் வெளிவந்து வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர், பாகுபலி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் நிராகரித்து விட்டதாகக் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம் கபூரிடம் பாகுபலி படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. பாகுபலி படத்தை இதுவரை பார்க்கவில்லை என்று கூறிய சோனம் கபூர், இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். பாகுபலி பட வாய்ப்பை நிராகரித்தற்கான காரணத்தை சோனம் கபூர் கூறவில்லை. பாகுபலி குறித்து சோனம் கபூரின் பேச்சு டோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.