தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூக வலைத்தளங்களில் டிவிட்டரில் டிரென்டிங் ஆவதுதான் முதலில் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த ஒரு டிரென்டிங் புகழுக்காகவே சில நடிகர்கள் அதற்கென சிலரை வேலைக்கும் நியமித்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு டிவிட்டரில் வரும் போது அது பற்றி 'தாறுமாறு தக்காளி சோறு' என புகழ்ந்து தள்ள வேண்டும். ஒரு கட்டத்தில் அதை அப்படியே ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டமும் தங்கள் தலைவனை டிரென்டிங்கில் கொண்டு வர இருக்கும் வேலைகளை விட்டு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
டிவிட்டரில் வந்த டிரென்டிங்கை ஃபேஸ்புக்கும் ஃபாலோ செய்ய ஆரம்பித்தது. அதன் பின் ஃபேஸ்புக் டிரென்டிங்கும் புகழ் பெற ஆரம்பித்தது. வெறும் வார்த்தைகளில் மட்டுமே அதிக ஜாலம் காட்டும் அவர்கள் டிரென்டிங் என்ற ஒன்றை ஆரம்பிக்கும் போது உலகத்திற்கே வீடியோவை இலவசமாகக் காட்டிக் கொண்டிருக்கும் யு டியூப் சும்மா இருக்குமா?. அவர்களும் இப்போது டிரென்டிங்கை உருவாக்கிவிட்டார்கள்.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பலர் நடிக்க சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கத்தி சண்டை' டீசரை நேற்று யு டியூபில் வெளியிட்டார்கள். வெளியான முதலே பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் யு டீயூப் டீசர் காலையில் யு டியூப் டிரென்டிங்கில் 10வது இடத்தில் உள்ளது.
இனி டிவிட்டர், ஃபேஸ்புக் டிரென்டிங்கை விட யு டியூப் டிரென்டிங் மிகவும் பரபரப்பாகப் பேசப்படப்போவது உறுதி.