மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாக்., நடிகர் நடித்த திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என, இந்திய சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது, இதனால் ஏ தில் ஹை முஷ்கில் படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஜம்மு -- காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, செப்டம்பரில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதற்கு பதிலடியாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக புகுந்த, நம் வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பாக்., நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திரையிடும் தியேட்டர்கள் மீது, மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த, பிரபல நடிகர் பவத் கான், குணசித்திர வேடத்தில் தோன்றியுள்ள, ஏ தில் ஹை முஷ்கில் இந்தி திரைப்படம், தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது; இதற்கும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, இந்திய சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பாக்., நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என, அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர், நிதின் தாதர் கூறியதாவது: இந்தியா - பாக்., இடையே உறவு சீர்குலைந்துள்ளதால், பாக்., நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திரையிட எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, அத்திரைப்படங்களை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளோம்.மக்களிடம் இருந்தும், இத்தகைய கோரிக்கைகள் வருகின்றன. எனவே, தேச பக்தியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த முடிவால், கரண் ஜோகர், இயக்கம், தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ தில் ஹே முஷ்கில் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.