'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காமெடியனாக கொடி கட்டிப்பறந்த சந்தானத்துக்கு ஹீரோ ஆசை வந்ததும் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அதே நேரம் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எனவே தன்னுடைய பேனரிலேயே சொந்தப்படம் எடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்களில் பல படங்கள் கமர்ஷியலாக ஓடவில்லை. கடைசியாக அவர் நடித்த தில்லுக்கு துட்டு படம் மட்டுமே வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. அதற்கு முன் நடித்த 'இனிமே இப்படித்தான்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
சர்வர் சுந்தரம் படத்தில் தற்போது நடித்து வரும் சந்தானம் அடுத்து நடிக்கும் படத்தை வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார். வி.டி.வி.கணேஷின் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் என்பவர் இயக்குகிறார். சந்தானத்துடன் வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர் முதலானோர் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.