கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் அடிபடுகிறது. கபாலி அளவுக்கு இப்படம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. காரணம்.. லைகா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய பிறகே 2.0 படம் குறித்த செய்திகளை வெளியிடுவது என்ற முடிவில் உள்ளனர். அப்படி செய்தால்தான் 2.0 பட ரிலீஸ் நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர் லைகா நிறுவனத்தினர்.
இந்நிலையில், 2.0வின் ஃபர்ஸ்ட லுக் டீஸரை அடுத்த மாதம் அதாவது நவம்பர் 20-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த தகவலை லைகா நிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ரஜினியுடன் அக்ஷயகுமார் வில்லனாக நடிக்க, எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை நீர்வ ஷா கவனித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். 2.0 படம் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியாகுமாம்!