ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து இயக்கும் படம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே.பாலாஜி நடிக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். 2 ஆயிரம் பேருக்குகூட வேலை கிடைப்பதில்லை. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். என்ஜினீயரிங் படித்தவர்கள் ஓட்டலில் வேலை செய்கிறார்கள், கான்ஸ்டபிள் வேலைக்கு ஜட்டியுடன் வரிசையில் நிற்கிறார்கள், ஏன் வாட்ச்மேனாக கூட இருக்கிறார்கள். படிப்புக்கும் வேலைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி என்பதை பற்றி கமர்ஷியலாக பேசப்போகிறது படம்.
கவுதம் கார்த்திக் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை ரிச்சி தெருவில் செல்போன் சர்வீஸ் பண்ற வேலை பார்க்கிறார். தினசரி நாட்டு நடப்புகள் பற்றி மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிடுவது பொழுதுபோக்கு. ஆர்ஜே பாலாஜி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு ஆட்டோ ஓட்டுகிறவர். இருவரும் நண்பர்கள். கவுதம் கார்த்திக் வெளியிடும் ஒரு மீம்ஸ் அவருக்கு பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள். அதற்கு அவர்களின் என்ஜினீயரிங் படிப்பு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதுதான் படத்தின் கதை.