ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் 'முருகவேல்' என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் முழுக்க முழுக்க சத்யராஜையும் அமலாபாலையும் வைத்தே இரண்டு நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து கடந்த வருடம் வெளியான 'லைலா ஓ லைலா' படம் தான் தற்போது தமிழில் 'முருகவேல்' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.. இவர்களை இருவரையும் முன்னிறுத்தியே தான் 'முருகவேல்' படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது..
ஆனால் மலையாளத்தில் உருவான இந்தப்படத்தின் கதாநாயகன் மோகன்லால் என்பதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்பதுதான் திகைக்க வைக்கிறது.. இன்றைய சூழலில் மோகன்லாலின் படங்கள் தமிழ்நாட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.. அப்படி இருக்கையில் மோகன்லாலை விட பெரிய ஆட்கள் என சத்யராஜையும் அமலாபாலையும் வைத்து எந்த தைரியத்தில் விளம்பரம் பண்ணுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. தமிழ் சினிமாவில் அமலாபாலுக்கு இருக்கும் புகழும் மதிப்பும் கூட மோகன்லாலுக்கு இல்லையென இந்த டப்பிங் கோஷ்டியினர் நினைத்துவிட்டார்களோ என்னவோ..?