பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் கங்கனா ரணாவத்தும் ஒருவர். யாரும் ஏற்க முடியாத வேடங்களில் தைரியமாக நடித்து அதில் பாராட்டும் பெற்று விடுவார் இந்த தேசிய விருது நடிகை. அதற்கு உதாரணமாக குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். இப்போது அடுத்தப்படியாக ‛சிம்ரன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஹன்சல் மேத்தா இயக்கும் இப்படத்தின் அநேக காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
படத்தில் கங்கனா, விவாகரத்து பெற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், இந்த சமூகத்தில் எப்படி தனியாக போராடி ஜெயிக்கிறார் என்பது மாதிரியான கதை. முழுக்க முழுக்க தனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருப்பதால் கங்கனா இப்படத்தை தேர்வு செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. பூஷண் குமார், சைலேஷ் சிங் இருவரும் இணைந்து சிம்ரன் படத்தை தயாரிக்கிறார்கள்.