பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் இப்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோனம் கபூர், எப்போதும் தன் மனதில் பட்டதை பளீச் என்று சொல்லிவிடுவார். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி...
சமீபத்தில், இவர் நடிகை நேகா தூபியாவுடனான விவாத நிகழ்வில் பங்கேற்றார். அப்போது நேகா, சோனமிடத்தில் பிரியங்கா, தீபிகா இருவரில் யார் சிறந்த நடிகை என்று கேட்க, சற்றென்று பிரியங்கா தான் என்று தனது மனதில் பட்டதை சொன்னார் சோனம். மேலும் தீபிகாவை விட பிரியங்கா சிறந்த நடிகை. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
சோனமின் இந்த பதிலுக்கு தீபிகாவிடமிருந்து என்ன பதில் வர போகிறதோ....?