தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படத்திற்கு இசைய மைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. அதையடுத்து தனுஷின் பல படங்களுக்கும் அவர்தான் இசையமைத்தார். இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்ற பாடலை பின்னணி பாடினார் தனுஷ். அதையடுத்து அவ்வப்போது பாடியவர், அனிருத் இசையில் 3 படத்துக்காக ஒய் திஸ் கொலவெறி -என்ற பாடலை பாடி பிரபலமானார். அதன்பிறகு தனுஷ் பாடிய ஆல்பங்களுக்கு மார்க்கெட்டில் வேல்யூ ஏற்பட்டது.
மேலும், சிம்பு போன்ற சில நடிகர்கள் மற்ற நடிகர்களுக்கு பின்னணி பாடி வரும் நிலையில், தனுஷ், தனக்காக மட்டுமே பின்னணி பாடி வருகிறார். ஆனால் அவரை தற்போது கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள யாக்கை படத்துக்காக ஒரு பாடலை பின்னணி பாட வைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சொல்லித்தொலையேன் என்று தொடங்கும் அந்த பாடலை தனுஷ் அழகாக ரசித்து பாடியிருக்கிறார்.