வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மொகஞ்சதரோ படத்திற்கு பின்னர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காபில் படத்தை ஹிந்தியில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளார்கள். ஹிருத்திக்கிற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம். அவரின் முந்தைய படங்களான கிரிஷ் வரிசை படங்கள் மற்றும் தூம்-2 படங்கள் ஆந்திரா-தெலுங்கானாவில் சக்க போடு போட்டது. இதை கருத்தில் கொண்டு தற்போது உருவாகி வரும் காபில் படத்தையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்கள். காபில் படம் அடுத்தாண்டு, ஜன.,26-ம் தேதி, ஷாரூக்கானின் ரயீஸ் படத்துடன் மோத உள்ளது.