பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். ராம் சரணுடன் துருவா, சாய் தரண் தேஜூடன் மிஸ்டர், மகேஷ் பாபுவுடன் வாஸ்கோடகாமா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், விஷாலுடன் துப்பறிவாளன் எனும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் கமலஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமான நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழைக் காட்டிலும் தெலுங்கிற்கே அதிக முன்னுரிமை கொடுக்கும் ராகுல் ப்ரீத்தி சிங், தேதிகளை மாற்றம் செய்ய முடியாததால் துப்பறிவாளன் படத்திலிருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.