டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெங்கடேஷ் நயன்தாராவுடன் இணைந்து நடித்த பாபு பங்காராம் படத்தின் வெற்றிக்கு பின்னர் குத்து சண்டை பயிற்சியாளராக குரு படத்தில் நடித்து வருகின்றார். ஹிந்தி மற்றும் தமிழில் மாதவன் நடிப்பில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை தெலுங்கிலும் இயக்குனர் சுதா இயக்குகின்றார். இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் அதே கதாபாத்திரம் ஏற்று தெலுங்கிலும் நடிக்கின்றார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குரு படத்திற்கு இசையமைக்கின்றார். குரு படத்தின் டீசர் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பதே இப்படம் குறித்த தற்போதைய தகவல். இப்படத்தின் படப்பிடிப்புகள் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகின்றன. குரு படத்தில் குத்து சண்டை பயிற்சியாளராக நடிக்கும் வெங்கடேஷ் தீவிர உடற்பயிற்களை தொடர்ந்து வருகின்றாராம்.