மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினிகாந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார்.
அப்போது, ராதிகா ஆப்தே கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் பணிவுமிக்கவர்; எளிமையானவர். தன் பணியில் அதீத ஈடுபாடுடைய அவர், கடுமையான உழைப்பாளி. அவரது கடின உழைப்பு, நம்ப முடியாத வகையில் உள்ளது. அவருடன் நடித்த அனுபவம், எனக்கு வரப்பிரசாதம். ரஜினியை விட, பெரிய நடிகர் யாரும் கிடையாது. என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய போது, ஆங்கிலத்தில் பேசினோம். அவரிடம், மராத்தி மொழி தெரியுமா என, கேட்டேன். அதையடுத்து, என்னுடன் அவர் மராத்தியில் பேசினார். அது, மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கபாலி படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சியை, இயக்குனர் கூறியபின், அதை, எனக்கு ஆங்கிலம் அல்லது மராத்தியில், ரஜினி மொழி பெயர்த்து சொன்னார்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.