ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் தில்ஜித்தும் ஒருவர். இயக்குநர் அபிஷேக் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‛உத்தா பஞ்சாப் ' படத்தில் முக்கிய வேடத்தில் தில்ஜித் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் அன்சாய் லால் இயக்கும் ‛பில்லாரி'படத்திலும் தில்ஜித் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‛பில்லாரி'படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.இப்படத்தில் தில்ஜித் பாடகராக நடித்து வருகிறார்.
இதைப்பற்றி தில்ஜித் கூறியதாவது...."‛பில்லாரி'படத்தில் பாடகராக நடிக்க உள்ளேன். படத்தில் நான் நடித்தது போல் நிஜ வாழ்க்கையில் என்னால் இருக்க முடியாது. என் நிஜ வாழ்க்கையில் ஒரு பாடல் கூட பாடியது இல்லை. ‛பில்லாரி'கதை 1990 அடிப்படையாக கொண்டது இதில் நான் ராக் ஸ்டாராக நடிக்க இருக்கிறேன் "என்றார்.