ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ருத்ரம்மாதேவி ராணியாக ரசிகர்களைக் கவர்ந்த அனுஷ்காவை பாகுபலி-2 படத்தில் தேசவசேனா ராணியாக காண ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொன்டிருகின்றனர். இந்நிலையில் ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் டீசர் வெளிவந்து அனுஷ்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. விஜயதசமி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளிவந்துள்ள ஓம் நமோ வெங்கடேசாய படத்தின் டீசரில் அனுஷ்கா, அம்மன் வேடத்தில் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கின்றார். பெருமாள் பக்தரான ஹாத்தி ராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ஓம் நமோ நெங்கடேஷாய படத்தில் ஹாத்தி ராம் பாபாவாக நாகார்ஜூனா நடிக்கின்றார். பிரபல பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் இப்படத்தை இயக்குகின்றார்.