‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் சிம்பு, பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விக்கு, நேற்று முன்தினம் பதில் அளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர், உங்கள் படங்களில், அஜித் பற்றிய காட்சிகள் இடம்பெறுவது ஏன்? என, கேள்வி எழுப்பினார். அதற்கு, அஜித்தை யாருமே கண்டுகொள்ளாதபோது, நான் தான் முதலில் அவரை, தல... தல... என, என் படங்களில் தூக்கி வைத்து கொண்டாடினேன் என, பதிலளித்தார். இந்த பதில், சிம்புவால் தான் அஜித் உயர்ந்தார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால், அஜித் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால், சிம்பு தன் பதிலுக்கு நேற்று விளக்கம் தந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: நான், தீவிர ரஜினி ரசிகன்; எல்லாரும் ரஜினி பற்றி பேசிய போது, எந்த பின்புலமும் இல்லாமல் தனிநபராக சினிமாவுக்கு வந்த அஜித் பெயரை, நான் தான், முதன் முதலில் என் படங்களில் பயன்படுத்தினேன்; அவர் பற்றி பேசினேன். அதன்பின், மற்றவர்கள் பேசத் துவங்கினர். அஜித்தை கொண்டாடியதில், நான் தான் முதல் ஆளாக இருந்தேனே தவிர, நான் தூக்கி வைத்து கொண்டாடியதால் அவர் முன்னுக்கு வரவில்லை. அவரது கடின உழைப்பு, அவரை தூக்கி நிறுத்தியது; என் பதிலை தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.