ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'தெறி' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் தற்போது 'பைரவா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளிவர உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் வரை போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே 'பைரவா' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அவருடைய 61வது படத்தின் இயக்குனர் அட்லீ என்றும் அப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கப் போகிறார் என்றும், அப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அஜித் பற்றி ஏதாவது ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் டிரென்டிங் ஆனால், உடனே பொங்கும் விஜய் ரசிகர்களும் விஜய் பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை டிரென்டிங்கில் விடுவது வழக்கம்.
அப்படித்தான் தற்போது விஜய்யின் 61வது படம் பற்றிய அதிகாரபூர்வமற்ற தகவல்களை விஜய் ரசிகர்கள் பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் எந்த விதமான அறிவிப்பு வருவதற்கு முன்பே படத்தில் இடம் பெறப் போவதாகச் சொல்லப்படும் கலைஞர்களைப் பற்றி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் அவற்றில் டிரென்டிங்கில் வந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு தீபாவளிக்குப் பிறகுதான் இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை விதவிதமான தகவல்கள் விஜய் 61 பற்றி பரவிக் கொண்டேதான் இருக்கும். அவையும் சமூக வலைத்தளங்களில் டிரென்டிங்கில் வந்து கொண்டிருக்கும்.