ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷால், கார்த்தி, ஜீவா என முன்னணி நடிகர்களை இயக்கி வந்த சசீந்திரனுக்கு தோல்விகள் அணிவகுத்ததால் அவருக்கு இறங்குமுகம் ஏற்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று விலகினார் உதயநிதி. எனவே, உடனடியாய் விஷ்ணு விஷால் நடிப்பில் 'மாவீரன் கிட்டு' என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் சுசீந்திரன்.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிவடைய உள்ளன. இந்த படம் வெளியானதும் கலையரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன் . இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சசிகுமாருடன் 'வெற்றிவேல்' மற்றும 'கிடாரி' ஆகிய படங்களில் நடித்தவர் இவர்.
சசிகுமாருடன இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகும் கூட நிகிலா விமலுக்கு வேறு படங்கள் வரவில்லை. எனவே, சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுக்க முடியாத நிலையில் அந்தப் படத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்.