‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தீப் கிஷான், மாயவன் மற்றும் மாநகரம் போன்ற தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க சந்தீப் கிஷானிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க சந்தீப் கிஷானிடம் இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். சந்தீப் கிஷானுக்கு சுசீந்திரன் கூறிய கதை பிடித்திருப்பதாலும், தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாலும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தீப் கிஷான் போலீஸாக வேண்டும் எனும் லட்சியத்துடன் வாழும் இளைஞனாக நடிக்கின்றார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷானுக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்து வருகின்றார்.