ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்பு போன்ற சில நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோவாகியிருக்கிறார்கள். இன்னும் சிலர் பல படங்களில் சிறிய கேரக்டர் ரோல்களில் நடித்து அதன்பிறகு ஹீரோவாகியிருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், 3 படத்தில் தனுஷின் நண்பனாக நடித்து அதையடுத்து மெரினா படத்தில் ஹீரோவாகி விட்டார். 3 படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மெரினா படவாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் முதல்பாதியில் மட்டுமே சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
மேலும், நடித்த முதல் படமே வெற்றியாக அமைந்ததால் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து இப்போது முன்னணி நடிகராகி விட்டார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு சில நடிகர்களுக்கு தம்பியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் மனதளவில் உள்ளதாம். இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினி, அஜீத், விஜய் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த நடி கர்கள். அதனால் அவர்களது படத்தில் அவர்களின் தம்பியாக நடிக்க சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம் இவர்கள் தவிர மற்ற நடிகர் களுடன் நடிக்க சொன்னால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.