ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மொஹஞ்சதரோ படத்தின் தோல்விக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன், ‛காபில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார். சஞ்சய் குப்தா இயக்குகிறார், ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தில் அமிதாப்-நீத்து நடிப்பில் வெளியான யாரனா படத்தில் இடம்பெற்ற ‛சாரா ஜாம்னா ஹசீனோ.. என்ற பாடலை அப்படியே இந்தக்காலத்திற்கு ஏற்றபடி காபில் படத்தில் ரீ-மேக் செய்கிறார்கள், இந்தப்பாடலுக்கு ராஜேஷ் ரோஷனே இசையமைக்கிறார். இந்தப்பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனும், ஊர்வசி ரவுட்டிலாவும் ஆட இருக்கிறார்கள். விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான செட் அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இறுதிக்குள் பாடல் காட்சியை படமாக்கி முடிக்க உள்ளனர். காபில் படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸாக இருக்கிறது.