'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மும்பையை சேர்ந்தவர் கிரிஷா கருப். நடனம், நடிப்பு, பாட்டை முறையாக கற்றவர். மாடலிங் துறையிலும், விளம்பரத்துறையிலும் பிசியாக இருக்கக்கூடியவர். பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். பல்வேறு அழகி போட்டிகளில் டைட்டில் வென்றுள்ளார்.
சில குறும்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ள கிரிஷா, ஆண்ட்னி சார்லஸ் இயக்கிய அழகுகுட்டி செல்லம் படத்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது கூட்டாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். சதீஷ் என்ற புதுமுகம் ஹீரோ, இவர்கள் தவிர கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ், உதயபானு மகேஸ்வரன், அப்புக்குட்டி கலையரசன், அன்புராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.கே.மதி இயக்குகிறார். சுரேஷ் நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரிட்டோ மைக்கேல் இசை அமைக்கிறார்.
கிரிஷா மீண்டும் ஆண்டனி சார்லஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது காஷ்மீரில் நடக்கும் திகில் கதை. அடுத்து ஷிவ் கோபால் வர்மா என்பவர் இயக்கும் நர்த்தகி என்ற படத்தில் நடன மங்கையாக நடிக்கிறார், இது இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைகிறார் கிரிஷா.