இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடெக்சன்ஸ் சார்பில் வர்கீஸ் தயாரித்துள்ள படம் 'தங்க ரதம்'. 'எனக்குள் ஒருவன்' மற்றும் 'ஸ்ட்ராபெர்ரி' போன்ற படங்களில் நடித்த வெற்றி, இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நீரஜா நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் செளந்தர்ராஜன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன், 'லொள்ளு சபா' சாமிநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெகன் உதவியாளர் பால முருகன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது : ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பின்னணியை கொண்ட கதை. காதல், காமெடி, ஆக்சன் என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி வரும் வேலையைச் செய்கிறார் நாயகன் வெற்றி. இவருக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் இடையில் நடக்கும் தொழில் போட்டி, எப்படி விபரீதமாக மாறுகிறது. அதில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இதுவரையில் எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை. நிஜமாகவே மார்க்கெட் நடைபெறும் அதே நேரத்தில்தான் தொடர்ச்சியாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நாகர்கோவில், பழனி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவிலும் ஒட்டன்சத்திரம் கதை களமாக இருந்ததில்லை. அதற்காகவே இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்றார் பாலமுருகன்.