நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் படம் இமைக்கா நொடிகள். கேமியோ பிலிம்ஸ் சார்பி சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கிறார் இதில் அதர்வா, ராஷி கண்ணா நடிக்கிறார்கள். ஆனால் நயன்தாராதான் எல்லாம். அவரைச் சுற்றித்தான் கதை நடக்கிறது. இந்தப் படத்தில் வரும் பவர்புல் வில்லன் கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் பரிலீசிக்கப்பட்டார்கள். சில இந்தி வில்லன்களும் பரிசீலிக்கப்பட்டார்கள்.
தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனுராக் காஷ்யப் பாலிவுட்டின் பரபரப்பான இயக்குனர். 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 10 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். பல படங்களை தயாரித்துள்ளார். அவரே இயக்கி தயாரித்த பிளாக் பெரி, நோ சுமோக்கிங், தேவ் டி, குலால், ஐ ஏம், சவுண்ட்டிராக், சாஹிர், திரினா, மைக்கேல் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு வருகிறார்.