மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ். கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் படவில்லை. சொந்த மண்ணில் நடித்துக் கொண்டிருந்தார்.
இயக்கதில் ஆர்வம் கொண்ட நடிகைகளில சிஜாவும் ஒருவர். மிலி என்ற மலையாளப் படத்தில் துணை இயக்குனரானார். இந்தியில் டிராபிக் படம் தயாரானபோது அதில் நடித்த சிஜா அந்தப் படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார்.
தற்போத சிஜா ரோஸ் றெக்க படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக திரும்பி வந்திருக்கிறார். றெக்கயில் விஜய்சேதுபதியின் அக்காவாகவும், கிஷோர் ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு தற்போது பேசப்பட்டு வருகிறது. இனி அவரை அக்கா, அண்ணி வேடங்களில் அடிக்கடி பார்க்கலாம்.