ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி திரையுலகில் உள்ள நடிகர்களில் 20 வருடத்திற்கும் மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். தற்போது ஷாருக் ரயீஸ், கெளரி ஷிண்டேவின் ‛டியர் ஜிந்தகி' படத்தில் சிறப்பு தோற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் நடித்து வரும் ‛ரயீஸ்' படத்தில் கள்ளச்சாரயம் விற்கும் தாதாவாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ‛டியர் ஜிந்தகி' படத்துடன் ‛ரயீஸ்' படத்தின் டிரைலர் ரிலீஸாக போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ‛ரயீஸ்' படத்தின் டிரைலர், ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஷாரூக்கின் பிறந்தநாளில் ரயீஸ் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யும்படி ரசிகர்களும், படக்குழுவினரும் கேட்டதாகவும், அதன்காரமாக தனது பட டிரைலரை வேறு எந்த படத்துடனும் இணைக்காமல் தன் பிறந்தநாளிலேயே வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிவிட ஷாரூக் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ரயீஸ் படம், அடுத்தாண்டு ஜன.,26ம் தேதி ஹிருத்திக் ரோஷனின் காபில் படத்துடன் மோத உள்ளது.