ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனின் தம்பியான அல்லு சிரிஷ் தானும் முன்னணி நடிகராக வேண்டும் என்ற முனைப்புடன் படங்களில் நடித்து வருகின்றார். அல்லு சிரிஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சிரிரஸ்து சுபமஸ்து திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் நாயானாக நடிக்க அல்லு சிரிஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் ஐதராபாத்தில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த அல்லு சிரிஷ், அம்மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற அல்லு சிரிஷ் அப்புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதுவரை தோழிகளையும், உறவினர் வீட்டு பெண்களையும் விடுவதற்காக இக்கல்லூரிக்கு வந்துள்ள நான் முதன்முறையாக உள்ளே நுழைந்துள்ளேன் அதுவும் சிறப்பு விருந்தினராக என டுவிட்டரில் அல்லு சிரிஷ் பதிவிட்டுள்ளார்.