ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அது தமிழாகட்டும், மலையாளமாகட்டும் சூப்பர்ஸ்டார் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். அப்படி நடந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் கருத்து மோதல் முதல் தியேட்டர் மோதல் வரை ஆங்காங்கே நடப்பதும் வாடிக்கைதான். அதுமட்டுமல்ல, ஏதோ ஒரு படத்தின் வசூலும் கூட பாதிப்புக்கு உள்ளாகும் அபாயமும் உண்டு. இதற்குமுன் 2001ல் மோகன்லாலின் 'ராவண பிரபு' மற்றும் மம்முட்டியின் 'ராட்சஸ ராஜாவு' ஆகிய படங்கள் ஓணம் பண்டிகையின் போது ஒரே நேரத்தில் ரிலீசாகின. அதில் மோகன்லால் படமே வெற்றி பெற்றது.
அதனால் தான் இவற்றை தவிர்க்கும் விதமாக மம்முட்டி, மோகன்லால் இருவருமே தங்களது படங்கள் ரிலீஸாகும் தேதிகளுக்கு போதிய இடைவெளி விட்டு வருகிறார்கள். குறைந்தபட்சம் 15 நாட்கள் இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்ர்கள்... ஆனால் சுமார் 15 வருடங்கள் கழித்து இருவரின் படங்களும் நாளை (அக்-7) ஒரே நாளில் ரிலீஸாகும் அதிசய நிகழ்வு நடக்க இருக்கிறது. ஆம்.. மோகன்லால் நடித்துள்ள 'புலி முருகன்' படமும் மம்முட்டி நடித்துள்ள 'தோப்பில் ஜோப்பன்' படமும் நாளை வெளியாகின்றன. இரண்டு படங்களை பற்றியுமே 'டாக்' நன்றாக இருப்பதால் இரண்டுமே ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.