இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுலுக்கு, காதலில் விழுந்தேன் படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனால் அதையடுத்து பல படங்களில் வேகவேகமாக கமிட்டாகி நடித்தார். ஆனால் பின்னர் எதிர்பார்த்தபடி அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனபோதும், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது நகுல் நடிப்பில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு படம் செய்.
மலையாளத்தில் வரிசையாக நான்கு ஹிட் படங்களை கொடுத்த ராஜ் பாபு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் என பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் கலகலப்பான காமெடி கதையில் உருவாகியிருக்கிறது. அந்த வகையில், மாசிலாமணி படத்திற்கு பிறகு இந்த படத்தில் காமெடி நாயகனாக நடித்திருக்கிறார் நகுல். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படம் தனக்கு வெற்றியாக அமையும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார் நகுல்.