பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
தற்போது பைரவா, நீனு லோக்கல் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்து பல படங்களில் கதை கேட்டு ஓகே பண்ணியிருக்கிறார். முக்கியமாக முன்னணி நடிகர்களின் படங்களாக ஒப்பந்தமாகியிருப்பதால் கூடிய சீக்கிரமே அவர் சமந்தா இடத்தை பிடித்து விடுவார் என்கிறார்கள். அதோடு, முன்னணி ஹீரோக்களின் படம் என்பதற்காக கவர்ச்சி உடைதரிக்காமல் தொடர்ந்து கட்டுப்பாடு விதித்தே நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், சில நடிகைகளைப்போன்று ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான உடல்கட்டுடன் இல்லாமல் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா என அனைத்து படங்களிலுமே வெயிட் போடாமல் ஒரே சீரான உடலமைப்புடன் காட்சி கொடுக்கிறார். ஆனால், இப்படி எல்லா படத்திலும் அவர் ஒரே மாதிரியான உடல்கட்டுடன் இருப்பதற்கு அவரது அம்மா மேனகாதான் காரணமாம்.
அதாவது, வீட்டில் இருக்கும்போது வெயிட் போடும் உணவுகளை கீர்த்தி சுரேஷின் கண்ணிலே காட்டாத மேனகா, அவுட்டோர் செல்லும்போதும் இந்த மாதிரி உணவுகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பட்டியல் போட்டு கொடுக்கிறாராம். அப்படி அம்மாவின் ஆலோசனைப்படி நடப்பதினால்தான் ஆரம்பத்தில் பார்த்தது போலவே இப்போதும் ஸ்லிம்மாக இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.