'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கும்கி படத்தில் தமிழுக்கு வந்தவர் லட்சுமிமேனன். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும்போதே நடிகையான அவர், தொடர்ந்து படித்துக்கொண்டே நடித்து வந்தார். ஆனால் ப்ளஸ்-2 படிப்பை முடித்து விட்டு அவர் கல்லூரிக்கு சென்றபோது அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு நடிக்க முடியவில்லை. அதனால் அஞ்சல் வழியில் படித்தபடியே நடிப்பில கூடுதல் கவனம் செலுத்த தயாரானார் லட்சுமிமேனன். அப்படி வந்தபோது அஜீத்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஜெயம்ரவியுடன் மிருதன் படம். இந்த இரண்டுமே வெற்றியாக அமைந்தது. தற்போது விஜயசேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்துள்ளார்.
அதனால் இனிமேல் வருடத்திற்கு 2 படம் என்பதில் இருந்து மாறி வருடத்திற்கு நான்கு படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் முகாமிட்டார் லட்சுமிமேனன். ஆனால், அவர் முழுநேர நடிகையான பிறகு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும், ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்தியாவது டைரக்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக தற்போது கதைக்கு அவசியப்பட்டால் பிகினி உடையணிந்தும் நடிப்பேன் என்று கூறி வருகிறார் லட்சுமிமேனன். அவரது உடல்கட்டுக்கு அந்த உடைக்கு பொருந்துமா? என்பது ஒரு பக்கமிருந்தாலும், அவரது இந்த துணிச்சலான ஸ்டேட்மென்ட் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.