ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி என பல படங்களில் நடித்தவர் பிரியாஆனந்த். பெரிய அளவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், சில மலையாள நடிகைகளின் அதிரடி பிரவேசத்தினால் மார்க்கெட்டில் பின்தங்கினார். அதோடு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர அவர் எடுத்த வாய்ப்புகள் எதுவும் ஒர்க்அவுட்டாகவில்லை. இந்நிலையில், தற்போது கெளதம் கார்த்திக் நடித்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் நடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ள பிரியா ஆனந்தின் திறமைக்கு சவால் விடக்கூடிய காட்சிகளும் உள்ளதால் இதன்பிறகு கோலிவுட்டில் தனது இமேஜ் மாறி மாறுபட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ப்ரியாஆனந்த்.
மேலும், தமிழில் பரபரப்பு குறைந்ததும் அண்டை மாநில மொழிப்படங்களில் நடிக்க கல்லெறிந்து வந்தார் பிரியாஆனந்த். அப்படி எடுத்த முயற்சி காரணமாக தற்போது அவருக்கு ஒரு இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் நடிக்கும் படங்களில் கதாநாயகிக்கு அதிகபட்சம் 30 நாட்கள்தான் கால்சீட் கேட்பார்கள். ஆனால் இந்த இந்தி படத்தில் பிரியாஆனந்திடம் 90 நாட்கள் கால்சீட் வாங்கியிருக்கிறார்களாம். அதனால் தற்போது தன்னைத்தேடி வரும் தமிழ்ப்பட தயாரிப்பாளர்களிடம் 3 மாதம் வரை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.