தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
புன்னகை இளவரசி சினேகா தற்போது பெரிய திரையில் மோகன்ராஜா இயக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். சின்னத்திரையிலும் முதன் முறையாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தற்போது நடுவராக உள்ளார்.
சினேகாக 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர் இதுவரை திரைப்படத்தில் பெரிதாக நடனம் ஆடியதில்லை. ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் முறைப்படி நடனம் கற்ற கிளாசிக்ல் டான்சர். பாண்டி என்ற படத்தில் மட்டும் லாரன்சுடன் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார். சினிமாவில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி வாய்ப்பு வந்ததும் ஒப்புக் கொண்டார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சினேகா அவ்வப்போது சின்ன சின்ன டான்ஸ் மூவ்மெண்டுகளை கொடுத்து வருகிறார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க சினேகாவின் ஆட்டத்தை பார்க்கலாம். இறுதியாக வெற்றி பெறும் ஜோடியுடன் சினேகா ஆட இருப்பதாக சேனல் வட்டாரரங்கள் தெரிவிக்கிறது. சினேகாவின் ஆட்டத்தை பார்க்க வேண்டுமானல் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வேண்டும்.