ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஜீ தமிழ் சேனலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி உச்சரிக்கும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற வார்த்தையை விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கலாய்க்கும் விதமாக ஒரு எபிசோடு ஒளிபரப்பினார்கள். அது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனால் செம டென்சனாகி விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். தன்னை கலாய்த்தவர்களுக்கு இணைய பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற சிறுவர் சிறுமியர் நடிக்கும் நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்போது சிறுவர்களின் நடிப்பைப்பார்த்து வியந்து போன அவர், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று தன்னை மற்றவர்கள் கலாய்த்த வார்த்தைகளை வைத்து அந்த சிறுவர்களை வாழ்த்துவது போல் சொன்னார். அதைக்கேட்டு கூடியிருந்த அனைவருமே பலத்த கரகோசம் எழுப்பினர்.