பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாவீரன் கிட்டு படத்திற்கு, நிச்சயம் தேசிய விருது கிடைக்கும், என, இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார். வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா படத்தை அடுத்து, இயக்குனர் சுசீந்திரன் - நடிகர் விஷ்ணு இணைந்துள்ள படம், மாவீரன் கிட்டு. இப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் முன்னோட்டம், சென்னையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
விழாவில், சுசீந்திரன் பேசுகையில், அழகர்சாமியின் குதிரை படத்தை போல, மாவீரன் கிட்டு படத்திற்கும், எனக்கு தேசிய விருது கிடைக்கும், என்றார். கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், இப்படம், சமூகத்திற்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பாக இருக்கும், என்றார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசுகையில், இப்படம், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும்; என்கதாபாத்திரம் அந்தளவுக்கு உள்ளது. இப்படத்திற்காக, நான் நிறைய விருதுகளை வாங்குவேன், என்றார்.