தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்தி நடிகர் இர்பான்கான். லைப் ஆஃப் ஸ்பை படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு அறிமுகமானார். தற்போது அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் இன்பெர்னோ. இதில் டாவின்சி கோட், ஏஞ்சல் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக இர்பான்கான் நடித்துள்ளார். இவர்கள் இருவரைத் தவிர பெலிசிட்டி ஜோன்ஸ், உமர்சய், பென் போஸ்டர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரான் ஹாவர்ட் இயக்கி உள்ளார், ஹன்ஸ் ஸிம்மர் இசை அமைத்துள்ளார். சல்வட்டோ டொடினோ ஒளிப்பதிவு செய்துள்ளார். இமேஜின் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொலம்பியாக பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
வருகிற 14ந் தேதி படம் உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறது. இந்திய நடிகர் நடித்துள்ள ஹாலிவுட் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.